தேசிய மொழிகள் கருத்திட்டத்துக்கு கனடா நிதி உதவி!

Monday, July 18, 2011

உத்தியோகபூர்வ மொழிகள் கொள்கையை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு உதவுவதற்கு கனடா முன்வந்துள்ளதாக சர்வதேச கூட்டுறவுக்கான கனேடிய அமைச்சர் அறிவித்துள்ளார்.
தேசிய மொழிகள் கருத்திட்டத்திற்காக கனடா கனேடிய சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பினூடாக 5.6 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

1950 ஆம் ஆண்டு கொழும்புத்திட்டம் தாபிக்கப்பட்டது முதல் இலங்கையூம் கனடாவும் அபிவிருத்திக் கூட்டுறவில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இக்கூட்டுறவு இன்றுவரையிலும் தொடர்கின்றது.
இலங்கையில் கனேடிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது நிலையான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என சர்வதேச கூட்டுறவுக்கான கனேடிய அமைச்சர் தெரிவித்தார். இந்த முயற்சிகளில் உத்தியோகபூர்வ மொழிகளை ஊக்குவிப்பதை ஒரு முக்கிய அம்சமாக அரசாங்கம் இனம் கண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ மொழிகளைப் பாதுகாக்கும் மேம்படுத்தும் நடைமுறை ரீதியான அனுபவத்தையிட்டு கனடா பெருமை அடைகிறது எனத் தெரிவித்த அவர் தேசிய மொழிகள் கருத்திட்டத்திற்கான கனேடிய பங்களிப்பினூடாக நாம் எமது அனுபவங்களையூம் நிபுணத்துவத்தையும் இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளோம் என் மேலும் தெரிவித்தார்.

0 comments:

IP
Blogger Widgets