சச்சின் எனது ஊக்கமருந்து: இங்கிலாந்து கப்டன் ஸ்டிராஸ்

Monday, July 18, 2011

ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இலங்கை-அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பயிற்சி தொடரில் நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் முறையை பயன்படுத்துவதில்லை என இலங்கை கிரிக்கட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே நிதி நெருக்கடியால் தவித்து வரும் இலங்கை கிரிக்கட் வாரியம், டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்தினால் கூடுதல் பணம் செலவாகும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1ம் திகதி முதல் அனைத்து பயிற்சி மற்றும் ஒருநாள் போட்டிகளில் டி.ஆர்.எஸ் கட்டாயம் அமல்படுத்தப்படும் என சர்வதேச கிரிக்கட் கவுன்சில்(ஐ.சி.சி) தெரிவித்துள்ளது. ஆனால் இவ்விரு அணிகளுக்கு இடையிலான பயிற்சி தொடர் ஆகஸ்டில் தொடங்குகிறது. இதனால் ஐ.சி.சி.யின் விதிமுறை இதை பாதிக்காது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கட் வாரிய இடைக்கால கொமிட்டியின் தலைவர் உபலி தர்மதாஸ டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது: டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்தினால் நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் செலவாகும்.
இந்த செலவை ஏற்க ஏதாவது விளம்பர நிறுவனங்கள் முன்வந்தால் செயல்படுத்தலாம். ஒன்றரை மாத காலம் நடைபெறும் இப்போட்டியில் டி.ஆர்.எஸ் முறையை செயல்படுத்த ரூ.66 லட்சத்து 78 ஆயிரம் வரை செலவாகும்.
கிரிக்கட் வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதால் இவ்வளவு பெரிய தொகையை செலவிட முடியாது என்றார். அவுஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 பயிற்சி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

0 comments:

IP
Blogger Widgets