அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழி வாங்க பாகிஸ்தானில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
தெஹ்ரிக் இ தலிபான் என்ற தீவிரவாத இயக்கத் தலைவர் வாலி உர் ரெஹ்மான் என்பவர் இது குறித்து தெரிவிக்கையில்,"பாகிஸ்தானில் 10 இடங்களைத் தாக்க தேர்ந்தெடுத்துள்ளதாகவும், அதில் முதல் இடமாகவே மெஹ்ரான் கப்பற்படைத் தளத்தைத் தாக்கியதாகவும்" கூறினார்.
கடந்த மாதத்தில் கராச்சியிலுள்ள மெஹ்ரான் கப்பற்படைத் தளத்தை தலிபான்கள் தாக்கி இரு உளவு விமானங்களை சுட்டு வீழ்த்தினர். 10க்கும் மேற்பட்ட வீரர்களையும் கொன்றனர்.
இந்நிலையில் மேலும் 9 ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைத் தாக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ள ரெஹ்மான் பாகிஸ்தான் ராணுவம் அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
இன்னும் 8 ஆண்டுகளுக்கு பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தத் தேவையான திட்டங்கள் தங்களிடம் இருப்பதாகத் தெரிவித்த ரெஹ்மான் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் தாக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா நேட்டோ உள்ளிட்ட நாடுகளில் விரைவில் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தெரிவித்த அவர் அவற்றில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவையே முதல் குறியாகும் என்று எச்சரித்தார். ரெஹ்மானின் தலைக்கு அமெரிக்கா ரூ.27 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மே 2ம் திகதி பின்லேடன் கொல்லப்பட்டதற்குப் பிறகு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தவிர வேறு எந்த நாடுகளிலும் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபடவில்லை.
அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தாக்குதல் நடத்த முயன்ற தலிபான்களின் திட்டம் முறியடிக்கப்பட்டாலும், மேற்கு நாடுகளில் ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் அவர்களின் திறன் மற்றும் தாக்குதல் வலிமை குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் மேலும் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்படும்: தலிபான்கள் எச்சரிக்கை
Monday, July 18, 2011
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment