சுகாதார அமைச்சர் உத்தரவு
1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுச் சட்டத்தின் 32வது ஷரத்தினை கடுமையாகக் கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் உணவுப் பொருட்களைத் தயாரித்தல் களஞ்சியப்படுத்தல் பயன்படுத்தல் விநியோகித்தல் இறக்குமதி செய்தல் உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனைக்காக பிரசாரம் செய்தல் ஆகிய செயற்பாடுகள் யாவும் இன்று முதலாம் திகதி முதல் தடைசெய்யப்படுகின்றது.
இது தொடர்பான விஷேட அறிவிப்பை சுகாதார அமைச்சு நேற்று விடுத்தது.
இச்சட்ட ஏற்பாட்டை மீறுபவர்களு க்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உணவுப் பரிசோதகர்களுக்கும் பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கும் கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

0 comments:
Post a Comment